பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

வெங்காயம் - 3

தக்காளி - 2 அல்லது பெரியது 1

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் எல்லாப் பொடி வகைகளையும் சேர்த்து இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிசறி அரை மணி நேரம் ஊற விடவும்

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் பிசறி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் வற்றி வரும் போது மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி வேக விடவும். இடையில் திறந்து கிளறி விடவும்.

சிக்கனிலுள்ள தண்ணீர் முழுவதுமாக வற்றியதும் சுருள பிரட்டி விட்டு சிறுத்தீயில் 10 நிமிடம் கிளறி மசாலா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: