பூண்டு மிளகு கோழி வறுவல்
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
பூண்டு - 15 பல்
மிளகு - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மிளகை பொடி செய்து கொள்ளவும்.
கோழியை நன்றாக உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாதி மிளகு தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கோழியை வேக வைக்கவும். (நீர் தேவைப்படாது). வேகாமல் இருந்தால், கால் டம்ளர் நீர் உற்றி வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மீதமுள்ள மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை வெந்து கொண்டிருக்கும் கோழியுடன் சேர்த்து, சிறுதீயில் வைத்து நன்கு தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
காரம் அதிகம் விரும்புபவர்கள் வறமிளகாயை விதை நீக்கி சேர்க்கலாம்.