புறா சாப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புறா - 2

மிளகாய் வற்றல் - 5

மல்லி - 1 தேக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

தேங்காய் சில் - 1

சின்ன வெங்காயம் - 10

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புறாக்களை சுத்தப்படுத்தி சிறு சிறு துண்டங்களாக நறுக்கி, மஞ்சள்தூள் சிறிது சேர்த்து கழுவவும்.

மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், தேங்காய் சில், வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, மஞ்சள் தூளுடன் புறா துண்டங்களை சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிசறியவற்றை போட்டு வதக்கி, எண்ணெய் விட்டு வரும்போது ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்து தண்ணீர் வற்றியதும் சிறு தீயில் சுருள கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: