புடலங்காய் முட்டை பொரியல்
0
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1/2 கிலோ
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
கறிவேப்பிலை - சிறிது
முட்டை - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புடலங்காயை சுத்தப்படுத்திவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
எண்ணை காயவைத்து கடுகு,சீரகம் தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
பின்பு புடலங்காய் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடியிட்டு வேக விடவும்
வெந்த பின்பு முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்