நெத்திலி பொடி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 100 கிராம்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனின் தலையை கிள்ளி விட்டு தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன், மிளகாய் தூள், சோம்பு தூள், உப்பு, மஞ்சள் தூள் போடவும்.

எல்லாவற்றையும் மீனில் சேரும் படி நன்கு பிரட்டிக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் அல்லது ஏந்தலான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்த மீனை போட்டு பொரிக்கவும்.

இடையில் லேசாக திருப்பி போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: