நெத்திலி கருவாடு பொரியல்
0
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 1 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1 1/2 கப்
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 10
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, எண்ணெய் - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
நெத்திலி கருவாடை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், நெத்திலி கருவாடு, மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வெந்து, சுருண்டு வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இந்த பொரியலில் சின்ன வெங்காயம் சேர்த்தால் அதிகச் சுவையாக இருக்கும்.
இதே முறையில் சாளைக் கருவாட்டிலும் செய்யலாம்.