நெத்திலி கருவாடு சம்பால்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு - 100 கிராம்

வேர்க்கடலை - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 6

தக்காளி - 1

பழுத்த சிவப்பு மிளகாய் (அல்லது) வெந்நீரில் ஊற வைத்த காய்ந்த மிளகாய் - 20

பூண்டு - 3 பல்

சர்க்கரை - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 100 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நெத்திலி கருவாட்டை மண் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி கருவாட்டை வறுத்து (deep fry) பேப்பர் டவலில் வடிய வைத்து கொள்ளவும்.

அதே எண்ணெயில் வேர்கடலையையும் வறுக்கவும். சின்ன வெங்காயம், மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் அரைத்த கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.

பச்சை வாசனை மறைந்ததும் வறுத்த கருவாடு, வேர்கடலை சேர்த்து கிளறவும்.

தண்ணீர் வற்றி ட்ரை ஆனதும் இறக்கி பரிமாறவும்..

குறிப்புகள்: