நெத்தலிகருவாட்டுப் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்தலி கருவாடு - 300 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 3

உள்ளி - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நெத்தலியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற விட்டு நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்யவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயை சின்ன, சின்னதாக நறுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதித்தவுடன் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு வெடித்தவுடன், வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அடுத்து நெத்தலியை போட்டு உப்பு, மிளகாய் பொடி சேர்த்து அளவான தீயில் பதினைந்து நிமிடங்கள் பொரிக்கவும்.

கருவாடு நன்றாக பொரிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதம் அல்லது பிட்டு என்பற்றுடன் பரிமாறலாம்.