நுரையீரல் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நுரையீரல் - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நுரையீரலை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

சட்டியில் நுரையீரலை போட்டு கரம் மசாலாத்தூள், உப்பு போட்டு 2 குவளை தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.

பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு பொரியவிட்டு மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறி வேகவைத்த நுரையீரலை போட்டு நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி சேர்ந்தால் போல் வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: