நுரையீரல் பிரட்டல்
தேவையான பொருட்கள்:
நுரையீரல் - 250 கிராம்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 2
தயிர் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மட்டன் மசாலா - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நுரையீரலை போட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்து எடுத்துள்ள நுரையீரலுடன் எல்லா மசாலா தூள்களையும் போட்டு பிரட்டவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிரையும் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள் போட்டு ஒரு முறை வதக்கிவிட்டு, பின்னர் பிரட்டி வைத்துள்ள நுரையீரலை போட்டு கிளறிவிடவும்.
ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். பாத்திரத்தை மூடி வைத்து மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
நுரையீரல் நன்கு வெந்து, தண்ணீர் வற்றியவுடன் திறந்து கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்.