திருக்கை மீன் வறுவல்
தேவையான பொருட்கள்:
திருக்கை மீன் - 1/4 கிலோ
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
முதலில் அம்மியில் தேங்காயை வைத்து அரைத்து விட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு வைத்து அரைக்கவும். அதனுடன் சோம்பு வைத்து ஒரு முறை அரைத்த பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
அரைத்த விழுதை மீனுடன் போட்டு நன்கு சேரும் படி பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் மீனை 5 அல்லது 6 துண்டுகள் போட்டு வறுக்கவும்.
2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் 4 நிமிடம் கழித்து எடுத்து பரிமாறவும்.