தளிகா'ஸ் சிக்கன் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - 15
அல்லது பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
குருமிளகு பொடி - 1.5 தேக்கரண்டி
சீரக தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி காயவைத்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய
பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
பின்பு மற்ற தூள்களை சேர்த்து 5 நிமிடம் வதக்கி பிறகு சிக்கன் சேர்த்து 15 நிமிடம் மூடியிடாமல் வதக்கவும்.
பின் மூடியிட்டு தீயை குறைத்து 30 நிமிடம் வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
30 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சிக்கனில் இருந்து தண்ணீர் நிறைய வெளியாகி இருக்கும்.
பின் தீயை கொஞ்சம் கூட்டி தண்ணீரை வற்றவைத்து ட்ரையாக சிக்கன் ரோஸ்ட் போல் ஆனதும் இறக்கி பரிமாறவும்.
இதை அப்பொழுதே பரிமாறுவதை விட சில மணிநேரம் கழித்து சூடாக்கி பரிமாறினால் சுவையாக இருக்கும்.