சைனீஸ் மீன் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துள்ளுகெண்டை மீன் - 4

பூண்டு பல் - 6

வெள்ளை மிளகு தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை

நுக் மம் (ஃபிஷ் சாஸ்):

ஃபிஷ் சாஸ் - 1/2 கப்

சீனி - 3/4 கப்

தண்ணீர் - 2 கப்

வினிகர் - 1/4 கப்

அஜினோமோட்டோ - 1/2 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் - 4

பூண்டு - 4 பல்

துருவிய கேரட் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து உப்பு போட்டு கழுவி வைக்கவும்.

பூண்டை துருவி வைக்கவும்.

மீனை இரண்டு புறமும் கத்தியால் கீறவும். மேலும் துருவிய பூண்டு, அதில் மிளகுப்பொடி, அஜினோமோட்டோ ஆகியவற்றைப் போட்டு பிசறி மீனின் மேல் எல்லா இடத்திலும் பரவினாற் போல் தடவவும்.

பிறகு ஒரு நாண் ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு அதில் மீனை மிதமான தீயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

பொரித்த பின்பு இதன் மேல் நுக்மம் விட்டு ஊற வைத்து பரிமாறவும்.

நுக் மம் (ஃபிஷ் சாஸ்) செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் சீனி, ஃபிஷ் சாஸ் இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

பின்பு இறக்கி ஆற விடவும், பின்பு அதில் வினிகர், நசுக்கிய பூண்டு, நசுக்கிய மிளகாய், துருவிய கேரட் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

இதுவே நுக்மம்.

குறிப்புகள்: