செம்மீன் தோரன்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய இறால் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - 10 இலைகள்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 கீறியது
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஊறவைக்க:
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை பொடியாக நறுக்கி அதில் மஞ்சள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நிமிடம் ஊறவிடவும்.
எண்ணெயை காயவைத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதில் நறுக்கின இறாலையும் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு 3 நிமிடம் மூடி வைத்து வற்றவிடவும்.
பின் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.