சென்னாங்குன்னி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சென்னாங்குன்னி கருவாடு - 1 கப்

வெங்காயம் - 2

கறிவேப்பிலை - 2 கொத்து

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சென்னாங்குன்னி கருவாடை ஊறவைத்து உப்பு போக சுத்தம் செய்து கொள்ளவும்.

கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சுத்தம் செய்த கருவாட்டைப் போட்டு மொறுமொறுப்பாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்புச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். (கருவாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால் வெங்காயத்தில் உப்பு சேர்க்கும் போது கவனமாகச் சேர்க்கவும்).

வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வறுத்த சென்னாங்குன்னி கருவாட்டைச் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும். (விரும்பினால் சிறிது மல்லித் தழை சேர்க்கலாம்).

குறிப்புகள்:

சாம்பார் மற்றும் ரச சாதத்திற்கு நன்றாக இருக்கும்.