சென்னகுனி சம்பால்
0
தேவையான பொருட்கள்:
சென்னகுனி - 100 கிராம்
துருவிய தேங்காய் - பாதி
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 6
எலுமிச்சை - பாதி
செய்முறை:
சுத்தம் செய்த சென்னக்குனியை மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு ஆறியவுடன் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்பு அதிலேயே தேங்காய், மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சாப்பிடும் போது எலுமிச்சை சாற்றை பிழிந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
விருப்பமில்லாதவர்கள் எலுமிச்சை சேர்க்காமலேயே சாப்பிடலாம்.