சீலாமீன் கான்டினென்டல் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீலா மீன் - 5 பீஸ்

எலுமிச்சை சாறு - 3 (ஜூஸாக பிழியவும்)

இஞ்சி - 2 அங்குலம்

பூண்டு - 6 பல்

மிளகு - 1 1/2 தேக்கரண்டி

ரஸ்க் தூள் / ரவை - 1 கப்

முட்டையின் வெள்ளைக் கரு - 3 என்னம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சீலாமீன் துண்டுகளை சுத்தப்படுத்தியபின் எலுமிச்சை சாரில் நனைத்து எடுக்கவேண்டும்.

பின் இஞ்சி,பூண்டு,மிளகு இவற்றை நன்கு மை போல் அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மீனுடன் சேர்க்கவும்.

முட்டையின் வெள்ளைக்கருவை கொஞ்சமாக தடவிக் கொள்ளவேண்டும்.

பின் மீனின் மீது ரஸ்க் தூள் / ரவையை சீலாமீனின் மீது தூவ வேண்டும்.

இதை சூடான எண்ணையில் பொறித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: