சில்லி மட்டன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு இறைச்சி - 1/2 கிலோ

மிளகாய்த் தூள் - 1/2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

மஞ்சள் துள் - 1 தேக்கரண்டி

பூண்டு - 5 பற்கள்

வெங்காயம் - 1/2 கிலோ

இஞ்சி - ஒரு துண்டு

வினிகர் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 50 கிராம்

கொத்தமல்லித் தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பூண்டைத் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

உருளைக்கிழங்கைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், வினிகர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இறைச்சியை நன்கு சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் வேக வைத்த இறைச்சியைச் சேர்க்கவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து, உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.

கலவை கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: