சில்லி ஃபிஷ்
தேவையான பொருட்கள்:
வஞ்சரம் அல்லது வவ்வால் மீன் - 1/2 கிலோ
எண்ணெய் - 1/4 கப்
ஒன்றாக கலக்க:
தயிர் - 1/2 கப்
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
சோய் சாஸ் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
சிவப்பு கலர் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கலக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
ஒவ்வோரு மீனையும் அதில் முக்கி எடுத்து ஒரு மணி நேரம் ஒரு தட்டில் வைக்கவும்.
பின்னர் தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மேலே ஒரு மீனை வைத்து, திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வெந்து பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
அதேபோல அனைத்து மீனையும் சமைத்து எடுத்து பரிமாறவும்.