சிம்பிள் இறால் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் (பெரியதாக) - 15

சின்ன வெங்காயம் - 15

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தக்காள் சாஸ் (அல்லது) கெட்சப் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை நன்கு சுத்தம் செய்து விட்டு பெரியதாக இருந்தால் நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நான்காக நறுக்கிக் கொள்ளவும். சுத்தம் செய்த இறாலில் சாஸ் மற்றும் மசாலாத்தூள்களையும் தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு பிரட்டி கால் மணி நேரம் வைத்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்திருக்கும் கலவையை கொட்டி மிதமான தீயில் பத்து நிமிடம் வரை வைத்திருக்கவும்.(இடையிடையே கிளறிக் கொள்ளவும்).

பின்பு இறாலில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி மசாலா பிரண்டு வந்ததும் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து கிளறவும்.

வெங்காயம் சேர்த்து ஐந்து நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாம்பார், தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.