சிக்கன் 65 (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 150 கிராம்

சோள மாவு - 4 மேசைக்கரண்டி

தனி மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

முட்டை - 1

எலுமிச்சை - பாதி

இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு

பூண்டு - 3 பல்

கலர் பவுடர் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு தனி மிளகாய் தூள், உப்பு, சோள மாவு மற்றும் கலர் பவுடர் போட்டு பிசைந்து கொள்ளவும்.

அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி பிசையவும்.

பிறகு எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு, இஞ்சி, பூண்டை தட்டிப் போட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்த சிக்கனைப் போட்டு பொரிக்கவும். சிக்கன் இருபக்கமும் வெந்து நன்கு பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: