சிக்கன் விங்க்ஸ் ரோஸ்ட்
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் விங்க்ஸ் (இறகு) - 12
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/4 கப்
பொடியாக நறுக்கியசின்ன வெங்காயம் - 1/4 கப்
கொத்தமல்லி இலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
தயிர் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி போட்ட பாத்திரத்தில் இரவு முழுதும் ஃபிரிஜில் வைத்து ஊர வைக்கவும்.
இதை வழக்கம் போல் அவனில் வைத்து பேக் செய்யவும். (375 'ல் முர்சூடு செய்து, 35 நிமிடம் வைக்கவும்)
பின் வெளியேரிய நீரை நீக்கி 5 நிமிடம் கிரில் செய்யவும். (இடையில் திருப்பி விடவும்)