சிக்கன் ரோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

தக்காளி ப்யூரி - 2 தேக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 1/4 கிலோ

குடைமிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

தயிர் - 4 மேசைக்கரண்டி

கொத்தமல்லித் தழை - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நறுக்கி வைக்கவும்.

ஊறவைத்த சிக்கனுடன் தூள் வகைகள் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.

அதனுடன் தக்காளி ப்யூரி சேர்த்து மீண்டும் வேகவிடவும்.

பிறகு வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வேகவிடவும்.

சிறிது எண்ணெய் விட்டு நன்கு சுருள வேகவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: