சிக்கன் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் சதை - 10 அல்லது எலும்பு குறைந்த 2 அங்குல நீளமான துண்டுகளாக வெட்டவும்)

கறித்தூள் - 1 மேசைக்கரண்டி

உள்ளி, இஞ்சி பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

சோள மா - 1/2 கப்

உருளைக்கிழங்கு மா - 1/2 கப்

தேசிக்காய் - பாதி பழம்

வெள்ளை மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் துண்டுகளை தோல் நீக்கி சுத்தம் செய்து, வெளிப்பகுதியை கூரான கத்தியால் கீறி அடையாளங்கள் போடவும்

தேசிச்சாறு, உப்பு, கறித்தூள், உள்ளி இஞ்சி பேஸ்ட் இவற்றை ஒன்றாகக் குழைத்து, அதில் சிக்கன் துண்டுகளை நன்கு பிரட்டி எடுத்து, ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

இருவகை மாவையும், மிளகு தூளையும் கலந்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.

fryer தான் நல்லது. அல்லது சிக்கன் மூழ்கக்கூடிய அளவு எண்ணெய் விட்டு கொதித்ததும் அடுப்பை குறைத்து வைத்துக் கொள்ளவும்

சிக்கன் துண்டுகளை மாவில் மெதுவாக பிரட்டி எடுத்து, உடனேயே எண்ணெயில் போடவும்

நெருப்பைக் குறைத்து நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

நெருப்பு அதிகமானால் வெளிப்பகுதி உடனே கறுத்துவிடும்,உள்ளே சிக்கன் அவியாது. எனவே நெருப்பைக் குறைத்து மெதுவாக பிரட்டிப் பிரட்டிப் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: