சிக்கன் நுகற்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி (எலும்புல்லாத தசைப்பகுதி) - 1 கிலோ

முட்டை (வெள்ளைக்கரு) - 2 அல்லது 4

ரஸ்க்தூள் (காய்ந்த பாண்தூள்) - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பலகையில் கோழியின் எலும்புல்லாத தசைப்பகுதியை வைத்து கூர்மையான கத்தியினால் (விரும்பிய வடிவில் அல்லது விரும்பிய உருவத்தில்) விரும்பிய அளவில் துண்டுகளாக வெட்டவும்.

ஒரு பாத்திரத்தில் வெட்டியதுண்டுகள், (அரைகால் தேக்கரண்டி) உப்பு, தண்ணீர் ஆகியவற்றை போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.

நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு அதிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்த பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக்கரு, உப்பு ஆகியவற்றை எக் பீட்டரினால் நன்றாக நுரைக்கும்படி அடித்து வைக்கவும்.

ஒரு வாய் அகண்ட தட்டில் (உணவு உட்கொள்ளும் தட்டு) ரக்ஸ்தூளை(காய்ந்த பாண் தூள்)போட்டு பரப்பவும்.

அதன் பின்பு வெட்டிசுத்தம் செய்த கோழிஇறைச்சி துண்டு ஒன்றை எடுத்து அதனை முட்டையில் நனைக்கவும்.

முட்டையில் நனைத்தகோழி இறைச்சி துண்டை ரக்ஸ்தூள் (காய்ந்த பாண்தூள்) உள்ள தட்டில் போட்டு நன்றாக ரக்ஸ்தூளை கோழி இறைச்சியில் பிரட்டவும் (ரக்ஸ்தூளினால் கோழி இறைச்சியின் எல்லா பக்கமும் (கோழி இறைச்சி வெளியில் தெரியாதவாறு) நன்றாக மூடும்படி).

ரக்ஸ்தூள் பிரட்டிய கோழி இறைச்சிதுண்டை கவனமாக (கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்தூள் விழுந்து விடாமல்) எடுத்து அதனை ஒரு தட்டில் வைக்கவும்.

இதனைப்போல எல்லா கோழித்துண்டுகளுக்கும் செய்து முதலில் கோழித்துண்டினை வைத்த தட்டில் வைக்கவும்.

இந்த கோழித்துண்டுகளை (5-10) நிமிடங்கள் அப்படியே காய வைக்கவும் (இல்லாவிட்டால் எண்ணெயில் பொரிக்கும் கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்துள் கோழியிறைச்சியை விட்டு பிரிந்து விடும் ).

அதன் பின்பு இதனை ஒரு பாத்திரத்தில் வைத்து காற்று போகாதவாறு நன்றாக மூடி அல்லது பாலித்தீன் (ஒயில் தாள்) தாளில் அல்லது பாலித்தீன் பையில் போட்டு நன்றாக மூடிக்கட்டவும்.

மூடிக்கட்டிய பின்பு இதனை ப்ரிசரில் வைக்கவும் (தேவையான அளவுகளில் பல பைகளிள் போட்டு நன்றாக மூடி கட்டி வைக்கலாம் இதில் திறக்காமல் இருக்கும் பையில் உள்ள கோழித்துண்டுகள் 3 மாதங்கள் வரை பழுதடையாமல் வைத்து உண்ணலாம்).

கோழி நுகற்ஸ் தேவையான நேரங்களில் தேவைப்படும் பைகளை எடுத்து திறந்து ஒரு தட்டில் வைத்து அதனை சிறிது நேரம் அப்படியே வைத்து குளிர் இல்லாமல் செய்யவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலி) வைத்து தாட்சி(வாணலி) சூடானதும் தேவையானளவு எண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கோழிநுகற்ஸை போட்டு பொன்னிறமாக வரும்படி பொரிக்கவும் (நுகற்ஸ் குளிருடன் இருந்தால் அதன் உள்ளிருக்கும் கோழி இறைச்சி பொரியாது).

நன்றாக பொரிந்த பின்பு இதனில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை ஒரு மூடியால் சிறிது நேரம் மூடி வைக்கவும்.

சிறிது நேரத்தின் பின்பு சுவையான சத்தான சிக்கன் நுகற்ஸ் தயாராகி விடும்

.பின்பு ஒரு தட்டில் கோழி நுகற்ஸ், தக்காளிபழ சாஸ், பொம்பிரீட்ஸ் ஆகியவற்றை வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: