சிக்கன் தோரன்
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3/4 கப்
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
தேங்காய் - லேசாக தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
கோழி, வெங்காயம், பச்சை மிளகாய், தூள்கள், உப்பு, இஞ்சி, பூண்டு எல்லாம் சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வேக விடவும். (தண்ணீர் சேர்க்க தேவை இல்லை)
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த கறி மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 15 நிமிடம் சிறுந்தீயில் நன்றாக வதக்கி எடுத்து பரிமாறவும்.