சிக்கன் சுக்கா
தேவையான பொருட்கள்:
சிறிதாக நறுக்கிய சிக்கன் - 1 கிலோ
பெரிய சதுரமாக வெட்டிய பெரிய வெங்காயம் - 3
இஞ்சி - 1 துண்டு
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பூண்டு - 1
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
கறிமசால் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1கப்
எண்ணைய் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.
இஞ்சி, பூண்டை அரைக்கவும்.
பின்பு வாணலியில் எண்ணைய் ஊற்றி கோழிக்கறியை வறுத்து எடுக்கவும்.
மீதம் உள்ள எண்ணையில் நறுக்கிய பெரிய வெங்காயம், அரைத்த இஞ்சி,பூண்டு கலவை, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் பொரித்த கோழித்துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவை எனில் மேலே டொமோட்டோ சாஸ், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை போட்டு பரிமாறவும்.