சிக்கன் ஃப்ரை (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

சீரக தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி

தயிர் - 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறுத் துண்டு

பூண்டு - 2 பல்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

இதில் தயிர், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் இடித்து சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு பிரட்டவும்.

4 மணி நேரம் நன்றாக ஃப்ரிட்ஜில் வைத்து ஊற விடவும். பின் தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து சிக்கன் கலவையை சேர்த்து பிரட்டி விடவும்.

சிறிது வதங்கியதும் மூடி வேக விட்டு, கடைசியாக சிறிது நேரம் திறந்து வைத்து நன்றாக ஃப்ரை செய்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை எலும்பு உள்ள சிக்கன், எலும்பில்லாத சிக்கன், ட்ரம்ஸ்டிக் (கால்) என எதிர் வேண்டுமானாலும் செய்யலாம்.

நீர், எண்ணெய் தேவை இல்லை.

கறிவேப்பிலை தாளித்து சிக்கன் பிரட்டும் அளவு எண்ணெய் போதுமானது.