சிக்கன் ஃப்ரை (3)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (அல்லது) சின்ன வெங்காயம் - 15
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - தேவைக்கு
ஏலக்காய் - 3
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியை எலும்போடு பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வாசம் போக வதக்கவும்.
இதில் சிக்கன் சேர்த்து நன்றாக கலந்து மூடி வேக விடவும்.
சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் போதுமானது. சில நேரம் சிக்கனில் நீர் விடா விட்டால், அரை கப் தண்ணீர் சேர்க்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.