க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை
0
தேவையான பொருட்கள்:
இறால் - 1/4 கிலோ
கடலை மாவு - 4 தேக்கரண்டி
அரிசி மாவு - 4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் துருவல் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்த இறாலுடன் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் வைக்கவும்.
ஒரு தட்டில் தேங்காய் துருவலுடன் சிறிது அரிசி மாவை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
மசாலாவுடன் பிரட்டி வைத்திருக்கும் இறாலை தேங்காய் துருவலில் பிரட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை போட்டு சிறு தீயில் நன்றாக வெந்ததும் பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இறாலுக்கு பதில் சிக்கனில் செய்தால் KFC சிக்கன் போல் இருக்கும்.