க்ரில்டு சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி கால் - 3 (அல்லது) 4

இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி

பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

தேன் - 1 மேசைக்கரண்டி

மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

சர்க்கரை - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழி கால் சுத்தம் செய்து, கத்தியால் ஆழமான கோடுகள் இட்டு வைக்கவும்.

மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து கோழி காலில் பிரட்டி பிரிஜில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

இதை மைக்ரோவேவில் 20 நிமிடம் (இடையில் ஒரு முறை திருப்பி விடவும்) க்ரில் செய்து பரிமாறவும்.

குறிப்புகள்: