கோழி வறுவல்
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை - ஒரு அங்குலம்
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
மல்லி - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 6 பல்
செய்முறை:
வறுக்க கொடுத்தவற்றை கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும்.
ஆறியதும் கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த பொடியோடு பூண்டை சேர்த்து மீண்டும் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை போட்டு தாளித்து, பின் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதனுடன் கோழியை சேர்த்து பிரட்டவும்.
பின் தூள் வகைகள் மற்றும் அரைத்த பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்.
உப்பு மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து சிம்மில் வைத்து கோழியை வேக விட்டு பரிமாறவும்.