கோழி வறுத்தது





தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பூண்டு - 1 முழுவதுமாக
இஞ்சி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 150 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
தேங்காய் - 1/4 கப்
கடலை மாவு - 100 கிராம்
எண்ணெய் - 4 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டையும், இஞ்சியையும் அரைத்து வைக்கவும்.
சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், தேங்காய் மற்றும் கறிவேப்பிலையை நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த விழுதில் சிக்கன், உப்பு, 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரை குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிசறி 20 நிமிடம் ஊறவைக்க வைக்கவும்.
கடலை மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்து வைக்கவும். ஊறிய சிக்கனை இந்த கலவையில் முக்கி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அரை குழிக்கரண்டி எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதில் பொரிதெடுத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.