கோழி பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

வெங்காயம் - 1/2

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் (அல்லது) பொடியாக நறுக்கிய துண்டுகள் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 2

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

புளி கரைசல் - 1/4 கப்

கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழி, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தேங்காய் சேர்த்து வதக்கவும்.

தேங்காய் வதங்கியதும், பச்சை மிளகாய், மிளகு தூள், வேக வைத்த கோழி குழம்பு, புளி கரைசல், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு பரிமாறவும். (தண்ணீர் வற்றி, மசாலா கறியில் நன்றாக பிடித்துவிட வேண்டும்)

குறிப்புகள்: