கோகோ சிக்கன்
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1/4 கிலோ
தக்காளி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு பல் - 10
தேங்காய்ப்பால் - 150 மில்லி லிட்டர்
மல்லிக்கீரை - அரை கட்டு
பசு நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு தாளித்து, பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாயை வதக்கவும்.
சற்று வதங்கியவுடன், சுத்தம் செய்த கோழிக்கறியை கொட்டி, அதனுடன் மசாலாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்தூள், உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கலந்து சுமார் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
வெந்தவுடன் (சற்று திக்கான) தேங்காய்ப்பாலை ஊற்றி, மல்லிக்கீரையை நறுக்கி போட்டு நன்கு கிளறவும்.
தண்ணீர் சற்று வற்றி திக்கானவுடன் பசு நெய் விட்டு பிரட்டி இறக்கி பரிமாறவும்.