கிட்ஸ் மீன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சதை பற்றான மீன் - 6 அல்லது 8 துண்டுகள்

மிளகு தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை - 1

முட்டை - 2

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

அதில் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

அதன் பிறகு மசாலாவில் மீன் துண்டுகளை போட்டு போர்க்கை வைத்து லேசாக மீனை குத்தி விடவும். அப்படி குத்தி விடுவதால் மசாலா சீக்கிரம் சேரும்.

இந்த மீன் மசாலாவை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்திருக்கும் மீனை போட்டு பொரித்து பரிமாறவும்.

குறிப்புகள்:

அதிக காரம், எண்ணெய் சேர்க்காத வறுவல் ஆதலால் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், சுவையாகவும் இருக்கும்.