கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை
தேவையான பொருட்கள்:
சிக்கன் ப்ரெஸ்ட் - 1/2 கிலோ
சில்லி பவுடர் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - 1 தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
லெமன் ஜூஸ் - 1 மேசைக்கரண்டி
ப்ரெட் க்ரம்ஸ் - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
முட்டை - 1 (வெள்ளைக்கரு)
ரெட் கலர் - ஒரு பின்ச்
எண்ணெய் - 100 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
சிக்கன் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு தயிர், உப்பு, லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு விழுது, சில்லி பவுடர், ப்ரெட் கிரம்ஸ், கடலை மாவு, முட்டையின் வெள்ளை கரு, ரெட் கலர் ஆகியவற்றை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு ஒன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
சிக்கன் நன்கு பொரிந்து வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பர் விரித்த ஒரு பேனில் போட்டுக் கொள்ளவும்.
குறிப்புகள்:
ப்ரென்ச் ப்ரைஸை பொரித்தெடுத்து சிக்கனுடன் சேர்த்து பரிமாறலாம்.