காடை வறுவல்
0
தேவையான பொருட்கள்:
காடை - 4
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரித்து எடுக்கும் அளவுக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காடையை சுத்தம் செய்து துண்டு போட்டுக் கொள்ளவும்
அத்துடன் எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து கலந்து, சுமார் ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு துண்டாக போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.