கறி பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

இஞ்சி - 1 அங்குலம்

பச்சை மிளகாய் - 10

சின்ன வெங்காயம் - 30

கொத்தமல்லிப் பொடி - 2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

கடலை மாவு - 100 கிராம்

எண்ணைய் - 250 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறியை துண்டு துண்டாக செய்து உப்பு போட்டு வேக வைக்கவும்.

இஞ்சி, பச்சை மிளகாய் , சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையுடன் கொத்தமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

கடலை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாக் கலவையை சேர்த்து தண்ணீர் தெளித்து தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

வேகவைத்த கறித்துண்டுகளை இந்த மாவில் போட்டு புரட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் கறித்துண்டுகளை ஒரு தடவைக்கு 5/ 6 வீதம் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: