கணவா முருங்கைக்கீரைப் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கணவா மீன் - 4

முருங்கைக்கீரை - 1/4 கப்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்துக் கொள்ளவும். கணவாவை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பை போட்டு பொரிய விடவும்.

சோம்பு பொரிந்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கணவாவை போட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.

பிறகு அதனுடன் ஆய்ந்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை, மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு 2 நிமிடங்கள் பிரட்டி விடவும்.

அதன் பின்னர் 2 நிமிடங்கள் கழித்து ஒரு தட்டை வைத்து மூடி 5 நிமிடங்கள் வேக வைக்கவும். இடையில் ஒரு முறை திறந்து கிளறி விட்டு மீண்டும் மூடி 8 நிமிடங்கள் வேக விடவும். மூடாமல் செய்தால் கணவா வெடிக்கும்.

8 நிமிடம் கழித்து கணவா பொரிந்ததும் ஒரு முறை கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: