எள்ளு ப்ரான் ஃபிரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரான் - 1/2 கிலோ

முதல் கலவை:

இஞ்சி விழுது - 1 மேசைக்கரண்டி

பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

வெள்ளை மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

இரண்டாவது கலவை:

கெட்டி தயிர் - 1/2 கப்

க்ரீம் - 3 மேசைக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

கடலை மாவு - 1 1/2 மேசைக்கரண்டி

மேல் மாவு:

ப்ரெட் க்ரம்ப்ஸ் - 1 கப்

வெள்ளை எள்ளு - 1/2 கப்

செய்முறை:

ப்ரான் சுத்தம் செய்து வைக்கவும். இதை முதல் கலவையில் பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் நீர் இல்லாமல் எடுத்து இரண்டாம் கலவையில் 40 நிமிடம் ஊற வைக்கவும்.

ப்ரெட் க்ரம்ப்ஸ், எள்ளு இரண்டையும் ஒரு தட்டில் கலந்து வைக்கவும்.

இதில் ஊற வைத்த ப்ரானை பிரட்டி பிரிஜில் 15 நிமிடம் வைத்து எடுத்து காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: