எள்ளு கோழி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத கோழி - 1/2 கிலோ

இஞ்சி விழுது - 1 மேசைக்கரண்டி

பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

வெள்ளை மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

கெட்டி தயிர் - 1/2 கப்

க்ரீம் - 3 மேசைக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

கடலை மாவு - 1 1/2 மேசைக்கரண்டி

ப்ரெட் க்ரம்ப்ஸ் - 1 கப்

வெள்ளை எள்ளு - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழி சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து பிரட்டி 3/4 மணி நேரம் ஊற வைக்கவும்.

தயிர், க்ரீம், ஏலக்காய் தூள், கடலை மாவு கலந்து வைக்கவும்.

கோழி எடுத்து நீரை நீக்கி, தயிர் கலவையில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.

ப்ரெட் க்ரம்ப்ஸ், எள்ளு இரண்டையும் ஒரு தட்டில் கலந்து வைக்கவும்.

இதில் கோழி துண்டுகளை பிரட்டி பிரிஜில் 15 நிமிடம் வைத்து எடுத்து காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: