எறா ரோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எறா - 1/2 கிலோ

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியாதூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

கார்ன் ப்ளார் - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி

எண்ணைய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், கார்ன் ஃப்ளார், உப்பு இவற்றை சிறிதளவு தண்ணீரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

தில் சுத்தம் செய்த எறாக்களைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி எறாவை போட்டு பொறித்து எடுக்கவும்.

மற்ற வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி வெங்காயம்,தக்காளியை வதக்கி கொத்தமல்லி தழை , எலுமிச்சை சாறு, சிறிதள்ளவு உப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கி பொரித்த எறாவை போட்டு மீண்டும் ஒரு வதக்கு வதக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: