உப்பு கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

மிளகாய் வற்றல் - 10

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 50 கிராம்

பட்டை - 2 துண்டு

கொத்தமல்லி - 2 கொத்து

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - 3/4 தேக்கரண்டி

செய்முறை:

மிளகாய் வற்றலை சிறு சிறுத் துண்டுகளாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மட்டனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றலை போட்டு வதக்கவும். அதில் 2 சிட்டிகை உப்பு போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.

அதில் சின்ன வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கிய பின்னர் பூண்டை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்த கறியை போட்டு 2 நிமிடம் வதக்கி விடவும்.

அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வெயிட் போட்டு 5 விசில் வரும் வரை வேக விடவும். 5 விசில் வந்ததும் தீயை குறைத்து வைத்து 3 நிமிடம் வைத்திருக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம், வெந்தயம், கறிவெப்பிலை போட்டு தாளிக்கவும்.

அடுப்பை குறைத்து வைத்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கறியை போடவும். அதில் மஞ்சள் தூள், 3/4 தேக்கரண்டி உப்பு போட்டு கிளறி விடவும்.

கலவை நன்கு சுண்டி கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: