ஈஸி மீன் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
மீன் - 5 துண்டுகள்
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
ஆரஞ்ச் கலர் - சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
மீனில் உள்ள நீரை நன்கு வடித்து அத்துடன் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு குலுக்கி அரை மணி நேரம் ஊற விடவும்.
எண்ணெயை சூடாக்கி பின்னர் மீன் துண்டுகளை போட்டு 2 பக்கமும் திருப்பி விட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.