ஈஸி மீன் ரோஸ்ட்





தேவையான பொருட்கள்:
மீன் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
மீனுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்புச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வதங்கியதும் மீனைச் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் வைத்து வேகவிடவும். (இடையிடையே பிரட்டிவிடவும்).
மீன் வெந்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி விட்டு பரிமாறவும்.