ஈஸி சிக்கன் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை - தாளிக்க

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போக வதக்கவும்.

இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். நீர் சேர்க்க தேவையில்லை.

சிறிது நேரத்துக்கு ஒரு முறை எடுத்து கலந்து விடவும். அடி பிடிக்காமல் இருக்க உதவும்.

சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது எடுத்து விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: