ஈரல் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
ஈரல் - 250 கிராம்
வெங்காயம் - 10
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஈரலை நறுக்கி ஒரு கடாயில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, நறுக்கிய வெங்காயம், சோம்பு, சீரகத்தூள், மல்லிப்பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
ஈரல் சீக்கிரம் வெந்து விடும். வேறு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து ஈரலை கொட்டி கிளறவும்.