ஈசி ப்ரான் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரான் - 1/2 கிலோ

வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - கோலி அளவு

எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளி சிறிது தண்ணீர் விட்டு கரைக்கவும்.

வெங்காயம் பொடியாக நறுக்கவும்.

அனைத்தையும் சுத்தம் செய்த ப்ரானுடன் சேர்த்து பிரட்டி 1/2 மணி நேரம் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இதை சேர்த்து நன்றாக வேக விட்டு வறுவல் போல் வந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: