இறால் பூண்டு வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த குட்டி இறால் - 500 கிராம்

சின்ன வெங்காயம் (முழுதாக) - 50 கிராம்

முழு பூண்டு - 1

தக்காளி - 1

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 5

மிளகாய் பொடி - 1 மேசைக்கரண்டி

மிளகு பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கடுகு - 1 மேசைக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

கருவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும், எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.

பிறகு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இப்போது தக்காளி சேர்த்து எண்ணெய் மேலே வரும் வரை வதக்கவும்.

இந்த நிலையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இறாலையும் சேர்த்து பிரட்டி, அடுப்பை சிம்மில் வைத்து, கடாயை மூடவும்.

நீர் சேர்க்க தேவையில்லை. இறாலில் உள்ள நீரே வேக போதுமானது. 10 நிமிடத்தில் இறால் வெந்து விடும்.

இறால் வெந்ததும் மிளகு தூள் சேர்த்து நன்றாக பிரட்டி விட்டு தேங்காய் துருவல் தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: